கொரோனா காலம் பலரது வேலைகளைப் பறித்து விட்டது. ஆனால் பலர் தங்களுக்கென்று சில வினோத வேலைகளையும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
“1,500 ரூபாய் செலுத்தி, இந்தியா முழுவதும் பயணம் செய்ய இரண்டு மணி நேரத்திற்குள் ஈ-பாஸ் பெறுங்கள்” இது, வேலூரில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் காட்டுத்தீ போல் பரவி வரும் ஒரு விளம்பரம்.
தொற்றுநோயால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, மாநிலத்திற்குள்ளேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயண அனுமதிகள் கிடைப்பது கடினமாக உள்ள நேரத்தில், இப்படி ஒரு வணிக நிறுவனம் மாநிலத்தில் முளைத்துள்ளது. அரசாங்க மேல்மட்டத்தில் உள்ள சில இணைப்புகள் மூலம் இந்த வேலையை இந்நிறுவனம் செய்து வருகிறது.
வாட்ஸ்ஆப் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களை அழைத்தபோது, நிறுவனத்தின் நபர்களால் இரண்டு மணி நேரத்திற்குள் ஈ-பாஸைப் பெற்றுத் தர முடியும் என்பது உறுதியானது.
பயணியின் அசல் ஆதார் அடையாள அட்டை மட்டுமே தனக்குத் தேவை என நிறுவனத்தின் நபர் கூறினார்.
வெள்ளை எண் போர்டுகள் (தனியார்) கொண்ட வாகனங்களுக்கு 1,650 ரூபாய் செலவாகும் என்றும் மஞ்சள் நம்பர் பிளேட்டுகளை கொண்ட வணிக டாக்ஸிகளுக்கு அதை விட குறைவாகவே செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈ-பாஸ் (E-Pass) வாங்க முகவர்களாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட அதிகாரிகள் கூறினர்.
ALSO READ: தமிழகத்தில் அதிகரிக்கும் COVID-19 உயிரிழப்பு... ஒரே நாளில் 112 பேர் பலி!!
"எங்கள் மாவட்டத்தில், பயணத்திற்கான சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே பாஸிற்கான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இங்கு ஈ-பாஸ்களை அங்கீகரிக்க பொதுவாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் எடுக்கும். இருப்பினும், ஒரு நபர் பணத்திற்காக பயணிகளுக்கு ஈ-பாஸ் பெற்றுத் தருவதாக உறுதியளித்து வாட்ஸ்அப் செய்திகளை பரப்பி வருவதை நாங்கள் கவனித்துள்ளோம். மோசடி மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அந்த நபரை நாங்கள் விரைவில் கைது செய்வோம்” என்று வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம் கூறினார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோன்ற விளம்பரம் சமீபத்தில் கடலூர் மாவட்டத்திலும் வைரலாகியது.
மாவட்டத்தில் ஒரு பயண சேவை நிறுவனத்தை நடத்தி வரும் ஒருவர், 500 ரூபாய் செலவில் அரை மணி நேரத்திற்குள் ஈ-பாஸ் பெற உதவுவதாகக் கூறி ஒரு ஆடியோ மெசேஜை பரப்பினார். அந்த நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தென் மாநிலத்தின் பெருநகரங்கள் அல்லாத மாவட்டங்கள் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றின் முக்கிய மையங்களாக மாறியுள்ளன. லாக்டௌனை நீட்டிப்பதைத் தவிர, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, தேவையற்ற பயணங்களைத் தடுப்பதற்காக (Travel Restrictions) மக்களின் இயக்கத்தை மாநில அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
ALSO READ: Good News! கொரோனா தடுப்பூசி முதல் கட்ட சோதனையில் வெற்றி.. நாளை முதல் 2-ம் கட்ட சோதனை