குளத்தில் மூழ்கிய தனது இரு மகள்களை காப்பாற்றி உயிர் நீத்த தாய்..!

பட்டுக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கிய தனது இரு மகள்களை காப்பாற்றி விட்டு தாய் உயிர் நீத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 17, 2022, 02:21 PM IST
  • மகள்களுடன் குழிக்க சென்ற தாய்
  • நீரில் மூழ்கிய இரண்டு மகள்கள்
  • காப்பாற்ற தாய் உயிர் விட்ட சோகம்..!
குளத்தில் மூழ்கிய தனது இரு மகள்களை காப்பாற்றி உயிர் நீத்த தாய்..! title=

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட். கூலித்தொழிலாளியானது இவரது மனைவி ஸ்டெல்லா(47). சம்பவத்தன்று ஸ்டெல்லாவும் அவரது இரு மகள்களுடன் அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தன்னுடைய சென்றுள்ளார். அப்போது கரையில் நின்று குளித்துக் கொண்டிருக்கும் பொழுது இளையமகள் பெனினால் தண்ணீரில் திடீரென மூழ்கினார். அதைப் பார்த்த மூத்த மகள் வின்சி நீரில் மூழ்கிய தங்கையை காப்பாற்ற முயன்ற வேளையில் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

Pattukkottai,mother,death,daughter,drowning in a pond,water,kulam,Pattukkottai,mother,death,daughter,kulathil,water death,river death,பட்டுக்கோட்டை,குளத்தில் மூழ்கி,இரு மகள்களை காப்பாற்றி,பெரும் சோகம், பிரேத பரிசோதனை

இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்டெல்லா உடனடியாக தண்ணீரில்  இறங்கி மகள்கள் இருவரையும் கரைப்பகுதியில் தள்ளிவிட்டுள்ளார். அப்போது சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். ஆனால், ஸ்டெல்லாவை காப்பாற்ற முடியாமல் போனது. தண்ணீரில் மூழ்கி கைகள் மட்டும் வெளியில் தெரிய நீச்சல் அடித்து சென்ற இளைஞர்கள் அவரை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

Pattukkottai,mother,death,daughter,drowning in a pond,water,kulam,Pattukkottai,mother,death,daughter,kulathil,water death,river death,பட்டுக்கோட்டை,குளத்தில் மூழ்கி,இரு மகள்களை காப்பாற்றி,பெரும் சோகம், பிரேத பரிசோதனை

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி : இந்து அமைப்புகளின் செயலால் சர்ச்சை

இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்டெல்லாவின் உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நீரில் மூழ்க பார்த்த இரு மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் தன்னுடைய உயிரை நீத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | காதலனின் கல்லறையில் அடக்கம் செய்யுங்கள்.! காதலியின் உருக்கமான கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News