சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு தினமும் தக்காளி லோடு இறக்குபவர் கடந்த சில தினங்களுக்கு முன், 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டியை இறக்கியுள்ளார். இதனையடுத்து கடை உரிமையாளர் சங்கர் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு தக்காளி பெட்டியில் ஒன்று காணாமல் போனது. லோடு இறக்கியவரை தொடர்பு கொண்டு பேச, இரண்டு பெட்டிகள் போட்டதாக அடித்து சொல்லியிருக்கிறார்.
சந்தையில் தக்காளி விற்கும் விலைக்கு ஒரு பெட்டி தக்காளியை தொலைத்தவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் பதிவுகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தக்காளி பெட்டியை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. உடனே அதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர் புகாரளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினர். அதில் தக்காளி பெட்டியை திருடி சென்றவரின் வாகன எண்ணை வைத்து விசாரிக்க அதில், வெண்ணந்தூர் தங்கசாலைச் சேர்ந்த 32 வயதான சின்ராஜ் என்பவர் பிடிபட்டார்.
அவரை பிடித்து விசாரிக்க தக்காளியை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் மேலும் ஒரு தகவல் கிடைக்க, காவல்துறையினர் சின்ராஜின் முகத்தை வியந்து பார்த்திருக்கிறார்கள். ஏற்கனவே, செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் சின்ராஜ் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
மேலும் படிக்க | மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!
இந்நிலையில் தக்காளி திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சின்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்து காய்கறி மற்றும் பழங்களை திருடி வந்த நபர் மீண்டும் காவல்துறையினரிடம் பிடிபட்ட செய்தி தீயாய் பரவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR