திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் சவுமியா கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் நந்தினிதேவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நன்புடன் பழகிய சவுமியா மற்றும் நந்தினிதேவி ஆகியோருக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சவுமியாவிற்காக நந்கினி ஆணாக மாற முடிவு செய்து, அதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அறுவரை சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து நந்தினிதேவி யஷ்வந்த் என தனது பெயரையும் மாற்றிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், புதுமன தம்பதிகளான யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியும், சவுமியாவும் மதுரையில் உள்ள முருகன் கோயில் ஒன்றில் கடந்த 7ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு சாத்தூர் அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சவுமியாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சவுமியாவை கட்டாயப்படுத்தி யஷ்வந்திடம் இருந்து பிரித்து அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யஷ்வந்த் தனது மனைவி சவுமியாவை மீட்டுத்தரக்கோரி கடந்த 17ஆம் தேதி வந்தலகுண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்தேன் - அபர்ணா பாலமுரளி ஷேரிங்ஸ்
ஆனால் இந்த புகாரின்பேரில் காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொண்ட யஷ்வந்த் அவரின் உதவியோடு நிலக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று தனது மனைவியை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து யஷ்வந்தை சந்தித்த போலீஸார், சவுமியாவிற்கு உன்னுடன் வர விருப்பம் இல்லை எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யஷ்வந்த் தன் காதலிக்காக ஆணாக மாற அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் தனது ஆயுள்காலம் 40 ஆண்டுகளாக குறைந்துள்ளது எனவும் உயிரை பணயம் வைத்து சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்பட்ட தன் மனைவி தன்னிடம் நேரில் வந்து உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என சொன்னால் தான் செல்வதாகவும் கூறி யஷ்வந்த் டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | தேசிய விருதுப் பெற்ற நஞ்சியம்மாவின் ‘குரல்’ சொல்லும் கதை.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ