அணையிலிருந்து விநாடிக்கு 76,611 கன அடி நீர் திறப்பு. கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீர் திறப்பு!!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 23 ஆம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அணைக்கு 75 ஆயிரத்து 170 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு கருதி 75 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு 80 ஆயிரம் கன அடியை எட்டும் என்பதால், அந்த நீரை அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 120.40 கன அடியில் இருந்து 120.22 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் தற்போது நீர்மட்டத்தின் இருப்பு அளவானது சுமார் 93.82 டிஎம்சி ஆக உள்ளது.
இதை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 76,611 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து, கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.