தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் 60 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

Last Updated : Oct 14, 2018, 06:57 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 சிறப்பு ரயில்கள் இயக்கம்! title=

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் 60 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது...

"டிசம்பர் 2, 10, 17, 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06011) மறுநாள் காலை 9.50 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு டிசம்பர் 4, 11, 18-ம் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் (06012) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வந்தடையும்.

டிசம்பர் 14, 28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு இரவு 10.15 மணிக்கு புறப்படும் ரயில் (06001) மறுநாள் காலை 10.30-க்கு செல்லும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் டிசம்பர் 9, 16-ம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் (06002) அதிகாலை 3.30 மணிக்கு வந்தடையும்.

டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06007) மறுநாள் காலை 11.05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும்.

டிசம்பர் 5, 12, 19, 26-ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் (06008) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

டிசம்பர் 3, 5, 10, 12, 14, 17, 19, 26, 28, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு வரும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் (06027) மறுநாள் காலை 10.30 மணிக்கு செல்லும். மறுமார்க்கத்தில் இருந்து டிசம்பர் 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் (06028) மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வரும் என குறிப்பிட்டுள்ளது. 

Trending News