சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்துக்கொண்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைதாகி வரும் நிலையில், 6 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து உத்தரவை பத்திரப்பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா தெரிவித்துள்ளார்.
அதாவது பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல தற்போது கணினி ஆசிரியர் கிரேடு 1க்கான தேர்வில் 119 மையங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பிரிவிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே பல அதிர்ச்சிக்கரமான சம்பவங்கள் வெளியாக வரும் நிலையில், கணினி ஆசிரியர் கிரேடு 1லும் முறைகேடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விசாரணை மேற்கொண்டால் எத்தனை பேர் வெளிச்சத்து வருவார்கள் என்று தெரியவில்லை.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.