5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம்!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது!!

Last Updated : Jan 22, 2020, 12:35 PM IST
5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம்!! title=

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது!!

சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகளுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கட்டணம் இல்லை என சுற்றறிக்கை அனுப்பப்ட்டுள்ளது.

2019-2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 5 ஆம் வகுப்பு படிக்கும் கிராமபுற மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதனால் குழந்தை தொழிலாளர்கள் பெருகும் நிலையும் உருவாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு பயத்தால் தத்தளித்து வருகின்றனர். 

இந்த சூல்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்... 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மேலும் அரசு பள்ளிகள் நீங்கலாக, பிற பள்ளிகளில் 5- ஆம் வகுப்புக்கு ரூபாய் 100, 8- ஆம் வகுப்புக்கு ரூபாய் 200 தேர்வுக் கட்டணம் வசூலிக்கலாம் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Trending News