தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 20, 2019, 06:50 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசு உத்தரவு title=

சென்னை: இன்று தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் நேற்று வரை (மே 19) தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால், எந்தவொரு அறிவிப்பையும் தமிழக அரசு அறிவிக்க முடியாமல் போனது. ஆனால் தமிழகத்தில் நேற்று நான்கு சட்டசபை இடைத்தேர்தல்கள் முடிந்ததால், விதிமுறைகளை தளர்த்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. 

இதனையடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News