தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள்: பேரவையில் EPS அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு!!

Last Updated : Jul 10, 2019, 01:16 PM IST
தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள்: பேரவையில் EPS அறிவிப்பு!! title=

தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் சட்டக்கல்லூரி என மொத்தம் 14 சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிதாக 3 அரசு சட்டக் கல்லூரிகள் ரூ.9.58 கோடி செலவில் 2019 - 2020ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

மேலும், திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். தமிழகத்தில் 10,000 தடுப்பணைகள் ரூ.318 கோடியில் கட்டப்படும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 24 சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.24 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும். 

இதை தொடர்ந்து, சேலத்தில் ரூ.1 கோடியில் துணை பதிவுத்துறை அலுவலகம் கட்டித் தரப்படும். தமிழகத்தில் 5,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் ரூ.1,200 கோடியில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

 

Trending News