அக்டோபர் 25 2ஜி வழக்கின் தீர்ப்பு- சிபிஐ சிறப்பு கோர்ட்

Last Updated : Sep 20, 2017, 02:59 PM IST
அக்டோபர் 25 2ஜி வழக்கின் தீர்ப்பு- சிபிஐ சிறப்பு கோர்ட் title=

2ஜி வழக்கு தொடர்பாக தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்து இருந்தார். அதன்படி 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் இன்று வழங்கியது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 

திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ விசாரணை நடத்தியது. 

கடந்த 5 வருடங்களாக, இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஷைனியிடம், தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் '2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால், அடுத்த 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என பதிலளித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் இன்று அறிவித்தது. அதன்படி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.

Trending News