புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டியிட 17 விருப்ப மனுகள்...

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சர்பில் 11 பேரும், பாஜக சார்பில் 6 பேரும் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Sep 23, 2019, 10:09 PM IST
புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டியிட 17 விருப்ப மனுகள்... title=

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சர்பில் 11 பேரும், பாஜக சார்பில் 6 பேரும் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

புதுச்சேரி சட்டமன்றத்தில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. 

இந்நிலையில்., தேர்தல் நடத்தும் அதிகாரியும், சுற்றுலாத்துறை இயக்குனருமான முகமது மன்சூரிடம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 

வேட்புமனுக்களை காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 30-ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப்பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3-ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.  

இதனிடையே, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சர்பில் 11 பேரும், பாஜக சார்பில் 6 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப மனுக்கள் பரிசிலினை செய்யப்பட்டு, விரைவில் இரு கட்சி வேட்பாளர் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.

Trending News