தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் கொளுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட மாநிலம் முழுவதும் ஒரே சீராக வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் நொந்து கொண்டிருக்கின்றனர். மழையும் மக்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் வறட்சி தீவிரமாகியுள்ளது. மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறைந்தபாடில்லை.
வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் லேசான மழை இருந்தது. அதேநேரத்தில் வரும் 7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | காவு வாங்கும் கன்னியாகுமரி லெமூரிய கடற்கரை - 2 நாளில் 8 பேர் உயிரிழப்பு
8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
9ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் கொளுத்திய இடங்கள் :
கரூர் பரமத்தி - 110°F
ஈரோடு - 110°F
திருச்சி - 109°F
வேலூர் - 109°F
மதுரை விமான நிலையம் - 108°F
திருத்தணி - 107°F
திருப்பத்தூர் - 107°F
பாளையங்கோட்டை - 106°F
மதுரை நகரம் - 105°F
சேலம் - 105°F
தருமபுரி - 104°F
தஞ்சாவூர் - 104°F
மீனம்பாக்கம் - 102°F
கோவை - 102°F
நாகப்பட்டினம் - 100°F
என வெயில் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்! நெறிமுறைகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ