விஜய் சேதுபதியை எட்டி மிதித்தால் 1001 ரூபாய் : அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

விஜய் சேதுபதியை அடிப்பவருக்கு ஆயிரத்தி ஒரு ரூபாய் ரொக்கப் பரிசு தரப்படும் என்ற அர்ஜுன் சம்பத் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2021, 05:14 PM IST
விஜய் சேதுபதியை எட்டி மிதித்தால் 1001 ரூபாய் : அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை  title=

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவை விஜய் சேதுபதி அவமானப்படுத்தும் விதமாக பேசிவிட்டார், அதனால் விஜய் சேதுபதியை எட்டி மிதித்தால் 1001 ரூபாய் வழங்கப்படும் என்று இந்து மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.  சிறிது தினங்களுக்கு முன் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அனைவரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பெங்களூரு சென்றிருந்த போதுதான் இந்த சம்பவம் அரங்கேறியது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய விருது பெற்ற நடிகருக்கு இவ்வாறு நடந்தது அனைவரையும் அதிர வைத்தது.  ஏற்கனவே விமானத்தில் ஒருவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபீ  எடுக்க வேண்டுமென்று அவரின் உதவியாளர் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் மது அருந்தியிருந்ததால் விஜய் சேதுபதியின் உதவியாளர் மறுத்துவிட்டார். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து விமானத்திலேயே கைகலப்பு ஏற்பட்டது. 

அதனையடுத்து விமான நிலையத்திற்கு விஜய் சேதுபதி வந்ததும்,நடிகர் மகா காந்தி போதையில் செல்ஃபீ  எடுக்க முயன்றதாகவும், உதவியாளர் அதனை மறுத்ததால் தாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் விடுத்த அறிக்கை சர்ச்சையை கிளப்பி பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது விஜய் சேதுபதியிடம் மகா காந்தி குரு பூஜைக்கு வந்தீர்களா? என்று வினவியதற்கு, "யார் குரு..?" என்று நக்கலாக கேட்டார். அதனால் தான் கைகலப்பு ஏற்பட்டது என்று மகா காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்தார். 

 

இதனை வைத்து அர்ஜூன் "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவை விஜய் சேதுபதி அவமானப்படுத்தும் விதமாக பேசிவிட்டார். அதனால் விஜய் சேதுபதியை யார் உதைத்தாலும் அவர்களுக்கு ரூ.1001 பரிசுத்தொகை வழங்கப்படும்" என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ALSO READ இதற்காகத்தான் விஜய்சேதுபதியை தாக்கினேன்! உண்மையை உடைத்த காந்தி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News