CBSE-ன் மறுத்தேர்வு முடிவை எதிர்த்து டெல்லி பாராளுமன்ற தெருவில் SSC, NEET பயிற்சி பெறும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
CBSE 12-ஆம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10-ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்ததால், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என கடந்த மார்ச் 28-ம் தேதி CBSE அறிவித்தது.
இந்த முடிவினை எதிர்த்து SSC, NEET தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்கள் டெல்லி பாராளுமன்ற தெருவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
Delhi: Students,#SSC & #NEET aspirants protest at Parliament Street. #CBSEPaperLeak (Earlier visuals) pic.twitter.com/IbSAPemDR0
— ANI (@ANI) March 31, 2018
நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்வது ஏற்புடையது அல்ல, முன்னதாக நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும், இந்த விவக்காரம் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்தி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனவும் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை வலியுறுத்தி வருகின்றனர்
முன்னதாக நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவிக்கையில்...
வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் ரத்து செய்யப்பட்ட CBSE, 12 ஆம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் எனவும், 10 ஆம் வகப்பிற்கான தேர்வின் தேதி 15 தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார், மேலும் 10 ஆம் வகுப்பிற்கான தேர்வானது டெல்லி மற்றும் ஹரியான பகுதிகளில் மட்டுமே நடத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்!