தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்த போது கேமரான் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது.
அந்த பொருளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தி அவர் ஆட்டத்தின் போக்கினை மாற்ற திட்டமிட்டார் என எதிர் அணி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டடது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் கேமரான் பந்தை சேதப்படுத்தியதால் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது