நேற்று தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த கட்சி தலைவர்களான ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பால கிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் எரிப்பு ஆகிய காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் மூலம் உடனடியாக பரவி வருகின்றன.
இதை தொடர்ந்து, காயமடைந்தவர்களை நேற்று தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த கட்சி தலைவர்களான ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பால கிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்றதால் ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பால கிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் மீது 143, 188, 153 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.