காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11-ம் நாள் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்!
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானத்தினை அன்புமணி ராமதாஸ் நிரைவேற்றியுள்ளார். மேலும் கூட்டத்தில் பேசிய அவர் தெரிவிக்கையில், "தமிழர்கள் அமைதியாக இருந்ததால் தான் முல்லைப் பெரியார், ஈழவிவகாரம், அட்டப்பாடி தடுப்பணைகள் ஆகியவற்றின் உரிமைகளை இழந்துள்ளோம். மேலும் அமைதியாக இருந்து காவிரி உரிமையினையும் இழந்துவிட வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நடத்தும் தமிழ்நாட்டின் உரிமை காவிரி மேலாண்மை வாரியம் குறித்து அனைத்து விவசாய சங்க தலைவர்கள் - முன்னோடிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் தற்பொழுது சென்னையில் நடைபெறுகிறது.#CauveryWaterManagement #CauveryManagementBoard #CauveryIssue pic.twitter.com/MiaCGK0F0W
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 30, 2018
முன்னதாக இன்றைய தினம், காவிரி மேளான்மை வாரியம் அமைக்க கோரி தமிழக கட்சி தலைவர்கள் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி... அதிமுக தரப்பில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாமக தரப்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!