'விக்ரம் வேதா' திரைப்படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் ஷாருக்கான்!

தமிழில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. இப்படத்தின் ஹிந்தி பதிப்பில் நடிகர் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்...

Last Updated : Apr 21, 2018, 01:23 PM IST
'விக்ரம் வேதா' திரைப்படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் ஷாருக்கான்! title=

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. இப்படத்தின் ஹிந்தி பதிப்பில் நடிகர் ஷாருக்கானை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடிக்க வேண்டும் எனில் தனக்கு இரண்டு நிபந்தணைகள் இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அதன்படி படத்தில் விஜய் சோதுபதி ஏற்ற வேடத்தினை தான் ஏற்க விரும்பவதாகவும், தமிழில் இப்படத்தினை இயக்கி புஷ்கர்-காயத்திரி பதிலாக இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவருக்கு மாதவன் ஏற்ற வேடம் பரிந்துறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் ஷாருக்கான், தற்போது இயக்குனர் ஆனந்த் L. ராய் இயக்கத்தில் ஜீரோ என்னும் படத்தினை முடித்துள்ளார். இதனை தொடர்ந்து விக்ரம் வேதா திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News