ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைடந்த பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. போட்டி பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க | ICC T20 World Cup : சிட்னியில் மழை... இந்தியாவின் வெற்றி பயணம் தடைபடுமா...?
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது. பாபர் அசாம் 4 ரன்களுக்கும், ரிஸ்வான் 14 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த இப்திகார் 5 ரன்களில் ஆட்டமிழக்க பெரும் தடுமாற்றத்துக்குள்ளானது அந்த அணி. ஷான் மசூத் மட்டும் பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு பக்கபலமாக யாரும் எதிர்முனையில் இருக்கவில்லை. அந்தளவுக்கு ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சும் துல்லியமாக இருந்தது.
இறுதிக் கட்டத்தில் முகமது நவாஸ் 22 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்த நிலையில், அவரும் மசூத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தோல்வியின் விளிம்புக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 129 ரன்களை மட்டுமே எடுத்து, 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கத்துக்குட்டி அணி என கருதப்பட்ட ஜிம்பாப்வே அணி, அசத்தலாக விளையாடி வெற்றி பெற்று, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த தோல்வி மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளின் வெற்றி தோல்வி மட்டுமே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை நிர்ணயம் செய்யும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ