ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 முடிந்துவிட்டது. அனைத்து அணிகளும் இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024- க்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 4 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 9 வீரர்கள் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர். இந்த காலகட்டத்தில், ரோஹித் சர்மா பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.
அவரது தலைமையில் இந்திய அணி கடந்த 20 ஓவர் உலக கோப்பையில் கோட்டைவிட்டதால், அதன்பிறகு 20 ஓவர் இந்திய அணிக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருக்கிறார். அவர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். இந்த சூழலில் தான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை எந்த வீரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முன், 2021 முதல் எந்தெந்த வீரர்கள் டி20 இன்டர்நேஷனல் போட்டிகளில் இந்திய அணிக்கு எத்தனை போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ரோகித் சர்மா 32, ஹர்திக் பாண்டியா 16, விராட் கோலி 10, ரிஷப் பண்ட் 5, ஷிகர் தவான், ரிதுராஜ் கெய்க்வாட் தலா 3, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் தலா 2 மற்றும் கே.எல் ராகுல் ஒரு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பையின் போது காயமடைந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சர்வதேச தொடரில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் அவர் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு முன்பு இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்பஸ்ஸில் இதைப் பற்றி விவாதிக்கும் போது, ஜாகீர் கான், 'டி20 உலகக் கோப்பைக்கு அதிக நேரம் இல்லை. எனவே இந்திய அணி அனுபவத்துடன் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு அனுபவமிக்க வீரருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா பொறுப்பேற்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
ரோஹித் ஷர்மா சில காலம் கேப்டனாக இருந்துள்ளார். அவர் வீரர்களை நன்கு புரிந்துகொள்கிறார், சூழ்நிலைகள் மற்றும் அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியும். இந்த கேப்டன் பட்டியலில் மீதமுள்ள சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் எதிர்காலத்திற்கு தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரையில் 2024 டி 20 உலகக் கோப்பையில் ரோஹித் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ