இந்தியா வெற்றி பெற்றது எப்படி? பிக் சீக்ரெட்டை கூறிய சாஹல்

பரபரப்பாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது எப்படி? என்ற பிக்சீக்ரெட்டை கூறியுள்ளார் சாஹல். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2022, 02:39 PM IST
  • பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
  • இந்திய வெற்றிக்கான முக்கிய காரணம்
  • பேட்டியில் கூறிய யுஸ்வேந்திர சாஹல்
இந்தியா வெற்றி பெற்றது எப்படி? பிக் சீக்ரெட்டை கூறிய சாஹல் title=

Yuzvendra Chahal: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி திரிலிங்கான வெற்றியை பெற்றது. கடைசி ஓவர் வரை சென்ற இப்போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கியது இந்தியா. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சிறப்பாக செயல்பட்டதால், வெற்றி வசமானது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி கடைசி வரை இந்திய அணியை திகைப்பிலேயே வைத்திருந்தது. முதன் முறையாக இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்திய தவான், மைரிழையில் சதத்தை நழுவவிட்டார். ஆனால், வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | IND vs WI முதல் போட்டியிலேயே திக் திக்! 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

யுஸ்வேந்திர சாஹல், சிறப்பாக பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்திய அணியின் வெற்றி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது, "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் திரிலிங்காக சென்றது போட்டி. இப்படியான கடினமான சூழலை நான் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் எதிர்கொண்டிருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவம், இக்கட்டான சூழலில் சாதகமாக பந்துவீசுவது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் போட்டி கொடுக்கப்போகும் ஆல்ரவுண்டர்

கடைசி நேர ஓவர்களை வீசுவதை ஐபிஎல் போட்டிகளில் கற்றுக் கொண்டேன். ஏனெனில் 16, 17 மற்றும் 18வது ஓவர்களை வீசியதால், அங்கிருந்து எனக்கு நம்பிக்கை வந்தது. 40வது ஓவருக்குப் பிறகு என்னை 2-3 ஓவர்கள் வீசச் சொன்னார்கள். எனவே அதற்கேற்ப நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம்" எனத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 308 ரன்கள் குவித்தது. சேஸிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் சிறப்பாக விளையாடியது. இருப்பினும் கடைசி ஓவர் துல்லியமாக சிராஜ் வீசியதால், இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற முடிந்தது.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News