என்னப்பா! இப்படி சொல்லிட்டாரு.. ரோஹித் சர்மா குறித்து யுவராஜ் சிங்

50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ​​ரோஹித் தான் அழைத்து சென்றார். கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். அவரைப் போன்ற கேப்டன் தான் தற்போது தேவை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 21, 2024, 08:19 PM IST
  • டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் தலைமை தாங்குவார்.
  • எங்களுக்கு ஒரு நல்ல கேப்டன் மற்றும் ஒரு அறிவார்ந்த கேப்டன் தேவை.
  • இந்திய அணி வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
என்னப்பா! இப்படி சொல்லிட்டாரு.. ரோஹித் சர்மா குறித்து யுவராஜ் சிங் title=

யுவராஜ் சிங் அறிக்கை: முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், "ரோஹித் ஷர்மா ஒரு பொறுமையான விவேகமான கேப்டன் என்றும், அழுத்தத்தின் கீழ் நல்ல முடிவுகளை எடுப்பவர எனா தான் நம்புவதாகவும், இதன் காரணமாக டி20 உலகக் கோப்பையில் அவரது இருப்பு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார். ரோஹித் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியது. இவை தவிர, அவர் தலைமையில் இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. ரோஹித் பற்றி யுவராஜ் என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் தலைமை தாங்குவார். டி20 உலகக் கோப்பை பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் யுவராஜ் சிங், ஐசிசி அமைப்பிடம் கூறுகையில், "ரோஹித்தின் இருப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எங்களுக்கு ஒரு நல்ல கேப்டன் மற்றும் ஒரு அறிவார்ந்த கேப்டன் தேவை, இந்திய அணி வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ரோஹித் அப்படிப்பட்ட ஒரு கேப்டன் என நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க - இவ்வளவு நம்பமுடியாத சரித்திர சாதனைகளை செய்துள்ளாரா ரோஹித் சர்மா?

ரோஹித் போன்ற ஒரு கேப்டன் இந்தியாவுக்கு தேவை என்று யுவராஜ் நம்புகிறார். அவர் கூறுகையில், "50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நாங்கள் தோற்றபோது, ​​ரோஹித் தான் கேப்டனாக இருந்தார். கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். அவரைப் போன்ற கேப்டன் தான் தற்போது தேவை என்றார். 2007ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ரோஹித்தின் பயணத்தை யுவராஜ் உன்னிப்பாகக் கவனித்துள்ளார். ரோஹித்துடனான முதல் சந்திப்பின் நினைவைப் பற்றி கேட்டபோது, ​​யுவராஜ் நகைச்சுவையான தொனியில், 'ஆங்கிலம் தெரியாமல் நாங்கள் பேசியது தான்" என்றார்.

 

 

ரோஹித் சர்மாவின் சிறப்பையும் யுவராஜ் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில், "அவர் மிகவும் வேடிக்கையான நபர். போரிவலி (மும்பை) சாலையில் அவர் விளையாடியது முதற்கொண்டு அவரை நாங்கள் எப்போதும் கிண்டல் செய்து வருகிறோம். ஆனால் அவருக்கு நல்ல மனசு இருக்கிறது என்றார். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் அவர் இன்னும் மாறவில்லை. இதுதான் ரோஹித் சர்மாவின் சிறப்பு. எப்போதும் கேலி செய்து கொண்டே இருப்பார். ஒரு சிறந்த கேப்டன் மற்றும் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவர் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் அதற்கு தகுந்தவன்" என்றார்.

மேலும் படிக்க - டி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News