WTC Final: இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஏன் 6வது நாளாக விளையாடுகின்றன? தெரியுமா?

வழக்கமாக ஐந்து நாட்கள் ம்ட்டுமே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஏன் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது? மாற்று நாள் என்றால் என்ன?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2021, 08:08 AM IST
  • இந்தியா-நியூசிலாந்து அணிகள் WTC Test போட்டி
  • 6வது நாளாக தொடர்கிறது
  • கோப்பை யாருக்கு?
WTC Final:  இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஏன் 6வது நாளாக விளையாடுகின்றன? தெரியுமா? title=

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்திற்கு பிறகும் வெற்றி பெற்றது யார் என்று தெரியவில்லை. இன்று மாற்று நாளாக போட்டி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் மட்டுமே ஆடப்படும் டெஸ்ட் போட்டி, ஆறாவது நாளாக இன்றும் தொடர்வதற்கான காரணம் தெரியுமா?

முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் யார் முதலில் பேட்டிங் செய்வது என்பதை இறுதி செய்ய டாஸ் போடப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Also Read | WTC: இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்து யூடர்ன் அடித்த மைக்கேல் வாகன்

அதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது.  மழையின் காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டமும் ஒருமணி நேரம் தாமதமாகவே தொடங்கியது.

ஷமி அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 99.2வது ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5வது நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (ஜூன்.23) மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றும் போட்டி நடைபெற உள்ளது.

போட்டியின் அசல் ஐந்து நாட்களில் இழந்த எந்த நேரத்தையும் ஈடுசெய்வதற்காக ரிசர்வ் தினம் (Reserve Day) என்ற ஏற்பாடு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உண்டு. அதில் அதிகபட்சம் 98 ஓவர்கள் - 83 ஓவர்கள் மற்றும் கடைசி மணிநேரம் (குறைந்தபட்சம் 15 ஓவர்கள்) கொடுக்கப்படும். போட்டியின் இறுதி ஒரு மணி நேரம் எது என்பதை நடுவர்கள் (umpires) முடிவு செய்வார்கள்.

Also Read | இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

Also Read | WTC Final,Ind vs NZ: வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News