உலகக் கோப்பையில் விளையாடிய தந்தை - மகன்... தொட்டுத் தொடரும் பாரம்பரியம் - பட்டியல் இதோ

Cricket World Cup: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள தந்தை - மகன் ஆகியோரின் பட்டியலை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2023, 01:39 PM IST
  • இதுவரை 12 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது.
  • உலகக் கோப்பை தொடர்தான் கிரிக்கெட்டில் உச்ச தொடராக பார்க்கப்படுகிறது.
  • தந்தை ஒரு நாட்டையும், அவரின் மகன்கள் வேறு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளனர்.
உலகக் கோப்பையில் விளையாடிய தந்தை - மகன்... தொட்டுத் தொடரும் பாரம்பரியம் - பட்டியல் இதோ title=

Cricket World Cup: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் என்பது கிரிக்கெட்டில் ஒரு உச்சபட்ச போட்டித் தொடராகும். டி20 மற்றும் டெஸ்ட் வடிவத்தை ஒருங்கே உள்ளடக்கிய வடிவமான ஒருநாள் போட்டிகளுக்கு தற்போதைய காலகட்டத்தில் பெரிய ரசிகர் கூட்டம் இல்லை என்றாலும் அதற்கான எதிர்பார்ப்பு இன்றும் நிலவுகிறது. 

அந்த வகையில், இந்தியாவில் தற்போது 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு நடப்பு உலகக் கோப்பை தொடர் நிச்சயம் புத்துயிர் அளிக்கும் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, இதுவரை நடைபெற்று முடிந்த 12 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் தலா 2 முறையும், இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 

இந்த 12 உலகக் கோப்பை தொடரிலும் எண்ணிலடங்கா சுவாரஸ்ய நிகழ்வுகளும், மறக்க முடியாத போட்டிகளும் உள்ளன. அந்த வகையில், உலகக் கோப்பை தொடர்களில் தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பத்தை சேர்ந்த அதாவது தந்தை - மகன் ஆகியோரும் விளையாடி உள்ளனர் என்பதை சிலர் அறிவார்கள். இந்நிலையில், உலகக் கோப்பைகளில் விளையாடிய தந்தை - மகன் ஆகியோரின் பட்டியலை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | சேப்பாக்கத்தின் கில்லி ஜடேஜா... அவரிடம் அதிகமுறை ஆட்டமிழந்தவர் யார் தெரியுமா...?

1. லான்ஸ் கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து)  – கிறிஸ் கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியை சேர்ந்த அதிரடியான ஆல்ரவுண்டர் லான்ஸ் கெய்ர்ன்ஸ், 1975, 1979 மற்றும் 1983 உலகக் கோப்பைகளில் பங்கேற்றதன் மூலம் கிரிக்கெட் உலகில் தனது அழியாத முத்திரையை பதித்தார், லான்ஸ் கெய்ர்ன்ஸ். இவரை பின்பற்றி, மகன் கிறிஸ் கெய்ர்ன்ஸ் அடுத்தடுத்த உலகக் கோப்பைகளில் விளையாடிதன் மூலம் அவரின் குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்தார் எனலாம். கிறிஸ் கெய்ர்ன்ஸ் 1992, 1996, 1999, 2003 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் விளையாடினார்.

2. ஜெஃப் மார்ஷ் (ஆஸ்திரேலியா) – ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) 

ஆஸ்திரேலியாவின் மாபெரும் கிரிக்கெட் வரலாற்றில், ஜெஃப் மார்ஷ் 1987 மற்றும் 1992 உலகக் கோப்பைகளில் அவரது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார். அவரை போலவே, அவரின் மூத்த மகன் ஷான் மார்ஷ் 2019இல் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். தொடர்ந்து, அவரின் இளைய மகன் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டராக உருவெடுத்து, நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். 

3. கிறிஸ் பிராட் (இங்கிலாந்து) – ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து)

80s காலகட்டத்தில் இங்கிலாந்தின் திறமையான தொடக்க பேட்டராக கிறிஸ் பிராட் அறியப்பட்டார். இவர் 1987 உலகக் கோப்பையின் போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது அழியாத முத்திரையை பதித்தார் எனலாம். இவரை போலவே அவரது மகன் ஸ்டூவர்ட் பிராட்டும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பங்களிப்பை அளித்தவர். 2007 டி20 உலக்க் கோப்பை மற்றும் 2015 உலகக் கோப்பைகளில் இங்கிலாந்து அணிக்காக ஸ்டூவர்ட் பிராட் விளையாடினார்.

மேலும் படிக்க | 2019 உலகக் கோப்பை போல் காவி நிற ஜெர்ஸியில் இந்தியா... அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக?

4. ராட் லாதம் (நியூசிலாந்து) – டாம் லாதம் (நியூசிலாந்து)

ராட் லாதம், நியூசிலாந்தின் 1992 உலகக் கோப்பை அணியில் குறிப்பிடத்தக்க வீரர் ஆவார். அவரது குடும்ப கிரிக்கெட் பாரம்பரியத்தை பின்பற்றி, ராட் லாதமின் மகன் டாம் லாதம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கினார்.

5. ரோஜர் பின்னி (இந்தியா) - ஸ்டூவர்ட் பின்னி (இந்தியா)

தற்போது பிசிசிஐ தலைவராக இருப்பவர் ரோஜர் பின்னி. இவர் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றவர். மேலும், இந்திய அணியின் வெற்றியில் அவர் முக்கிய பங்காற்றி பிரபலமானார். ரோஜர் பின்னியின் கிரிக்கெட் பாரம்பரியத்தை அவரது மகன் ஸ்டூவர்ட் பின்னி முன்னெடுத்துச் சென்றார். ஸ்டூவர்ட் 2015 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்.

6. கெவின் கரன் (ஜிம்பாப்வே) – டாம் கரன், சாம் கரன் (இங்கிலாந்து)

கெவின் கரன் 1983, 1987 ஆகிய உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கா விளையாடியவர். இவரின் மகன் டாம் கரன் 2019 உலகக் கோப்பையின் இங்கிலாந்து ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தார். ஆனால், அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது நடப்பு உலகக் கோப்பையில் கெவின் கரனின் இளைய மகன் சாம் கரன் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

7. டிம் டி லீட் (நெதர்லாந்து) – பாஸ் டி லீட் (நெதர்லாந்து)

நெதர்லாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய நபரான டிம் டி லீட் 1996, 2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளில் தோன்றியதன் மூலம் தனது முத்திரையை பதித்தார். பல ஆண்டுகளாக அவரது நிலையான செயல்பாடுகள் நெதர்லாந்து கிரிக்கெட்டிற்கான அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அந்த வகையில் அவரது மகன் பாஸ் டி லீட் நடப்பு உலகக் கோப்பையில் விளையாடுகிறார். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

மேலும் படிக்க | மானம் காத்தார் கோலி... சச்சின் சாதனையும் முறியடிப்பு - உலகக் கோப்பையில் மாஸ் தொடக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News