பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?

Punjab Kings new coach : ஐபிஎல் 2025 தொடருக்கு புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 18, 2024, 05:48 PM IST
  • பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி அறிவிப்பு
  • புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்
  • டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தார்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா? title=

ஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மூன்று அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கியது முதல் இருந்தாலும், இந்த அணிகள் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஒவ்வொரு சீசன்களின் மிகமிக மோசமாக விளையாடி முதல் அணிகளாக இந்த மூன்றில் ஏதேனும் ஒரு அணி வெளியேறும். ஆண்டுதோறும் இந்தமுறையாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என களமிறங்கினாலும், முடிவு என்னவோ அவர்களுக்கு இதுவரை ஒரே மாதிரியாகவே இருந்திருக்கிறது.

மேலும் படிக்க | ரிஷப் பந்திற்கு பதில் துருவ் ஜூரில்? முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் விளையாடிய பிளேயர்கள் எல்லாம் மற்ற அணிகளுக்கு சென்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், ஒரு அணியாக இந்த மூன்று அணிகளும் ஐபிஎல் சாம்பியன் கோப்பைக்கு 17 ஆண்டுகளாக காத்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்வதற்காக ஒட்டுமொத்த அணியிலும் பல்வேறு மாற்றங்களை இந்த மூன்று அணிகளும் செய்யும். என்ன மாற்றங்கள் செய்தாலும் தோல்வி என்பது மட்டும் அவர்களுக்கான முடிவாகவே இருந்திருக்கிறது. மாற்றங்கள் பல வந்தாலும் முடிவு மாறவில்லை. அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக பெரிய மாற்றத்தை இம்முறையும் செய்திருக்கிறது.

பிபிகேஎஸ் அணி புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளது. அவர் யார் என்றால், ஆஸ்திரேலிய அணியின் தவிர்க்க முடியாத கேப்டனாக விளங்கியவரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ரிக்கி பாண்டிங் தான். ஐபிஎல் 2025 தொடரில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியளித்தாலும், ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை அந்த அணி வெல்லவில்லை. இதனால் அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிக்க அந்த அணி முடிவு செய்திருக்கிறது. இதனால் ரிக்கி பாண்டிங்கை தங்கள் அணிக்கு கொண்டு வந்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ரிக்கி பாண்டிங் வருகையால், பஞ்சாப் அணி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்கான பிளேயர்கள் தேர்வில் ரிக்கி பாண்டிங் கலந்து கொள்ள இருக்கிறார். முக்கியமான ஆஸ்திரேலிய பிளேயர்களை அவர் டார்க்கெட் செய்து இந்த ஏலத்தில் எடுப்பார் என தெரிகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News