இலங்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடுவது சந்தேகம்? பரபரப்பு செய்தி

SL vs PAK: ஆசிய கோப்பை போட்டியில் விளையாடாமலேயே பாகிஸ்தான் வெளியேறுமா? இலங்கையில் இருந்து வந்த மோசமான செய்தி 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2023, 02:56 PM IST
  • ஆசிய கோப்பை போட்டி அப்டேட்
  • இலங்கையில் இருந்து வந்த மோசமான செய்தி
  • பாகிஸ்தான் அணிக்கு சிக்கல்
இலங்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடுவது சந்தேகம்? பரபரப்பு செய்தி title=

கொழும்பு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக கொழும்பில் இருந்து ஒரு பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது.  இறுதிப் போட்டிக்கு வருவதற்கு இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி வாழ்வா அல்லது சாவா என்பதை முடிவு செய்யும் என்பது போல் முக்கியமானது. தற்போது சூப்பர்-4 புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா இரண்டு புள்ளிகளைப் உள்ளன.

ஆசியக் கோப்பை 2023 இன் சூப்பர்-4 தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான போட்டி வியாழக்கிழமை (செப்டம்பர் 14) கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இலங்கையில் இருந்து ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது, இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் அடியாக உள்ளது. பாகிஸ்தான் ஒரு போட்டியில் விளையாடாமல் வெளியேறும் அபாயத்தில் உள்ளது.

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணி அப்டேட்
 
ஆசியக் கோப்பை 2023 இல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்த பிறகு, இப்போது இறுதிப் போட்டிக்கு வரு0 இரண்டாவது அணியை முடிவு செய்யும் போட்டி தொடர்பான செய்தி இது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி உள்ளது. ஆனால் இந்த போட்டியில் மழை பெரிய வில்லனாக மாறிவிடும் போல தெரிகிறது.

மேலும் படிக்க | ODI: 10,000 ரன்கள் கிளப்பில் அதிக பேட்ஸ்மேன்களைக் கொண்ட நாடு பட்டியலில் இந்தியாவின் இடம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் சூப்பர்-4 கிரிக்கெட் போட்டிக்கான ரிசர்வ் நாள் இல்லை என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.. கொழும்பில் இன்று மழை பொழிவதற்கான சாத்தியக்கூறு 96% வரை உள்ளதாக Accuweather தெரிவித்துள்ளது. இருப்பினும், போட்டியின் போது (மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை) மழை பெய்ய வாய்ப்பு 45% முதல் 50% வரை இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டால், பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?

தற்போது சூப்பர்-4 புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 2-2 புள்ளிகளுடன் உள்ளன. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெறுபவரே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆனால், இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் 1-1 என்ற புள்ளிகள் பிரித்து கொடுக்கப்படும்.

அந்த சூழ்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகளைப் பெற்றிருக்கும். அப்போது, நிகர ரன்-ரேட் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணி நிர்ணயம் செய்யப்படும். இலங்கையின் நிகர ஓட்ட விகிதம் -0.200, பாகிஸ்தானின் நிகர ஓட்ட விகிதம் -1.892. இதுபோன்ற சூழ்நிலையில், மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது முடிவில்லாததாக இருந்தாலோ, பாகிஸ்தான் ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் அணியில் ப்ளேயிங் 11

முகமது ஹாரிஸ், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஜமான் கான்.

இலங்கையின் பிளேயிங் 11

பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குஷால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம், சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, தசுன் ஷங்க (கேப்டன்), துனித் வெல்லஸ், மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதிஷா பத்திரன.

மேலும் படிக்க | ஜோடியாக ரன்களை குவிக்க கெமிஸ்ட்ரி அவசியம்! உலகின் சிறந்த பேட்டிங் ஜோடிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News