Cricket: என்னதான் ஆச்சு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு?

என்னதான் ஆச்சு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு? ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவுடன் கிரிக்கெட் போட்டி என்றால் எதிரில் உள்ள இடம் அனைத்து அணிகளுக்கும் ஒரு பய உணர்வு வரும். ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2021, 03:05 PM IST
  • ஆஸ்திரேலிய அணி வரலாறு காணாத தோல்வி
  • பங்களாதேஷ் அணியிடம் 4-1 என்ற கணக்கில் T20 தொடரை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா
  • 13.4 ஓவர்களில் 62 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்-அவுட்
Cricket: என்னதான் ஆச்சு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு?  title=

என்னதான் ஆச்சு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு? ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவுடன் கிரிக்கெட் போட்டி என்றால் எதிரில் உள்ள அனைத்து அணிகளுக்கும் ஒரு பய உணர்வு வரும். ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

பங்களாதேஷ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியது. இதில் 4-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி வென்று தொடரை கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை வென்றது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி.

பின்பு நடந்த நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்தது. சுலபமான இலக்கை எளிதில் வென்று விடலாம் என்று களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Also Read | Salute the Olympic Gold! நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?

13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சுமார் 60 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆஸ்திரேலியா டி20 வரலாற்றில் இதுவே மிகவும் குறைவான ரன்கள் எடுத்த போட்டியாக வரலாற்றில் இடம்பெற்றது.

பங்களாதேஷில் விளையாடுவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் வீரர்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. சொந்த மண்ணில் விளையாடியது பங்களாதேஷ் அணியினருக்கு சாதகமாக அமைந்தது. கடினமான சூழலில் எப்படி விளையாடுவது என்று எங்கள் இளம் வீரர்கள் கற்றுக் கொண்டனர் என்று போட்டி முடிந்த பின் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் கூறியிருந்தார். கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறந்த ஆஸ்திரேலியா அணி இவ்வளவு மோசமாக ஆடுவதை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Also Read | Tokyo Olympics: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு CSK 1 கோடி ரூபாய் பரிசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News