இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களின் சதவிகிதத்தைக் குறிக்கின்றது. இதில் குறிப்பிட்ட ஏழு மாநிலங்கள் இந்தியாவில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதங்களைக் கொண்டுள்ளதாகத் தகவல் கூறுகின்றது.
படிப்பு மற்றும் கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. இது அவர்களின் பொருளாதார நிலைத்தன்மைகளையும், வசதிகளையும் தீர்மானிக்கும் கருவியாக அமைகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் இந்தியாவில் சில மாநிலங்களில் கல்வியறிவில் பின்தங்கி இருக்கின்றனர்.
இந்தியாவில் மக்கள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளை கவனித்துக்கொள்ள சில அடிப்படை கல்வியறிவு தேவையாக இருக்கிறது. அந்தவகையில் குறிப்பிட்ட இந்த மாநிலங்கள் இன்றும் கல்வியறிவில் பின்தங்கியிருப்பதாக தகவல் கூறுகின்றது.
இந்தியாவில் குறைந்த கல்வி அறிவு விகிதம் 61.80 சதவீதத்துடன் பீகார் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.
அடுத்ததாக, 65.38% கல்வியறிவுடன் அருணாச்சலப் பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 72.55 சதவீத ஆண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்தங்கிய கல்வி அறிவுடன் ராஜஸ்தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. பெண்கள் மட்டுமே 52.12 சதவீத கல்வியறிவு பெற்றுள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலம் நான்காவது இடத்தில் கல்வியறிவில் பின் தங்கியுள்ளது. இதில் 55.42 சதவீத கல்வி அறிவுடன் பெண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சதவீத கல்வி அறிவுடன் பின்தங்கியநிலையில் ஆந்திரப் பிரதேசம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 74.88 சதவீத கல்வியறிவியுடன் ஆண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கல்வி அறிவு விகிதம் 67.16 சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் பின்தங்கி உள்ளது. இதில் 56.43 சதவிகிதம் பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
சதவீத கல்வி அறிவுடன் உத்திர பிரதேசம் ஏழாவது இடத்தில் பின்தங்கி உள்ளது. இதில் 77.28% கல்வி அறிவுடன் ஆண்களும் மற்றும் 57.18 சதவீதத்துடன் பெண்களும் கல்வி அறிவு பெற்றுள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.