மிக குறைந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11000 ரன்கள் குவித்த வீரர் என்னும் பெருமையினை விராட் கோலி பெற்றுள்ளார்!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் பங்கேற்றுள்ள விராட் கோலி., இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 45-வது ஓவரில் தனது 60-வது ரன்னை எட்டினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11000 ரன்கள் குவித்தவர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார்.
மேலும் 11000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்னும் பெருமையினையும் விராட் கோலி பெற்றுள்ளார். சர்வதேச அளவில் 9-வது வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார் கோலி. இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்திலும், 11363 ரன்களுடன் கங்குளி 8-வது இடத்திலும் உள்ளார்.
மறுபுறம் பார்கையில்., ஒருநாள் போட்டிகளில் 11000 ரன்களை எட்ட சச்சின் டெண்டுல்கருக்கு 276 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதேப்போல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பான்டிக்கிற்கு 286 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் தற்போது இந்திய அணியின் தலைவர் விராட் கோலி இச்சாதனையை 222-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளார். இதன் மூலம் குறைத்த போட்டிகளில் 11000 ரன்கள் குவித்த வீரர் என்னும் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 45.90 சராசரியில் 459 ரன்கள் குவித்துள்ளார்(இன்றைய போட்டி சேர்க்காமல்). இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.