வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்ததன் மூலம் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
On fire! India skipper @imVkohli has his 49th half-century in ODIs, and has become the first player to score 2,000 international runs in 2018! #INDvWI LIVE https://t.co/IT7uA5nimO pic.twitter.com/avlvPgpKzR
— ICC (@ICC) October 21, 2018
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி தனது 60-வது சதத்தை நிறைவு செய்தார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் ஆகும்.
இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.