விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் மற்றும் 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி போது மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மழை மற்றும் மோசமான அவுட் பீல்டு காரணமாக தொடர்ந்து 2, 3 & 4-வது நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஈரப்பதத்தை உலர வைக்க பயன்படுத்தப்படும் ‘சூப்பர் சாப்பர்’ எந்திரம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இல்லை. அதிகமான ஈரப்பதத்தால் மைதானத்தின் பல பகுதி சேதமடைந்தது. அதை முழுமையாக சீர் செய்ய முடியவில்லை. கடைசி நாளான நேற்று வெயில் அடித்த போதிலும், ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லை என்று கூறி நடுவர்கள் கடைசி நாள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். அதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் முதல் இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. இப்போட்டி ‘டிரா’ ஆனதால் 2 புள்ளியை இழந்துள்ள இந்தியா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இரண்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக முதல் இடத்துக்கு முன்னேறியது.
ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் பட்டியல்:-
1. பாகிஸ்தான் (111 புள்ளி)
2. இந்தியா (110 புள்ளி)
3. ஆஸ்திரேலியா (108 புள்ளி)
4. இங்கிலாந்து (108 புள்ளி)
5. நியூசிலாந்து (99 புள்ளி)
6. இலங்கை (95 புள்ளி)
7. தென்ஆப்பிரிக்கா (92 புள்ளி)
8. வெஸ்ட் இண்டீஸ் (67 புள்ளி)
9. வங்காளதேசம் (57 புள்ளி)
10. ஜிம்பாப்வே (8 புள்ளி)
"We wanted to play aggressive cricket. Wanted to play five bowlers," says Man of the series @ashwinravi99 pic.twitter.com/HM6S12bV94
— BCCI (@BCCI) August 22, 2016
Great feeling to win series overseas!!! Off to maimi tomorrow and looking forward for the coming t20 matches!!! pic.twitter.com/poZ6zu5ja1
— Shikhar Dhawan (@SDhawan25) August 22, 2016
.@ashwinravi99 is Man of the Series after great performances with both bat and ball - which was his best? #WIvnd pic.twitter.com/dqEMSaAfTw
— ICC (@ICC) August 22, 2016
It's tight at the top of the MRF Tyres ICC Test Team Rankings as there is a new number 1! https://t.co/jICu3JYUvp pic.twitter.com/tjQAMLboet
— ICC (@ICC) August 22, 2016