Viral Video: புதிய தொடக்கம்! பயற்சியில் இறங்கிய ரோஹித்-ராகுல் கூட்டணி!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியைப் பார்ப்பது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை அளிக்கிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 16, 2021, 04:55 PM IST
Viral Video: புதிய தொடக்கம்! பயற்சியில் இறங்கிய ரோஹித்-ராகுல் கூட்டணி! title=

புது டெல்லி: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட் மற்றும் இந்திய டி20 சர்வதேச போட்டியின் (Twenty20 International) புதிய கேப்டன் ரோஹித் சர்மாவுடன் (Rohit Sharma) வலை பயிற்சியில் இறங்கியுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இந்திய அணி வலை பயிற்சியில் பங்கேற்று வருக்ரியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில், நவம்பர் 17ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக உள்ளது. பராஸ் மாம்ப்ரே மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் ராகுல் டிராவிட்டுடன் இணைந்துள்ளனர். பயிற்சியைத் தொடங்க மூவரும் மைதானத்திற்குள் நுழைந்தனர். டி20 சர்வதேச போட்டியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் மாம்ப்ரே மற்றும் ரத்தோருடன் அரட்டை அடிப்பதைக் காண முடிந்தது.

பயிற்சியில் ரவிச்சந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin), தீபக் சாஹர் (Deepak Chahar), முகமது சிராஜ் (Mohammad Siraj), ரிஷப் பந்த் (Rishabh Pant), யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal), புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar), இஷான் கிஷன் (Ishan Kishan), அக்சர் படேல் (Axar Patel) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தியா நியூசிலாந்துடன் (IND vs NZ) மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகிறது, அதன் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 

முதல் டி20 போட்டி நவம்பர் 17ம் தேதி ஜெய்ப்பூரிலும், 2வது டி20 போட்டி நவம்பர் 19ம் தேதி ராஞ்சியிலும், மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 21ம் தேதியும் நடக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கான்பூரில் (நவம்பர் 25-29) மற்றும் மும்பையில் (3-7 டிசம்பர்) நடைபெறும்.

ALSO READ |  IND vs NZ டி20 தொடர் முழு அட்டவணை போட்டி நேரம் நாள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்

புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் (ICC Men's T20 World Cup 2022) புதிய முகங்கள் தங்கள் அடையாளத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியைப் பார்ப்பது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை அளிக்கிறது. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஐபிஎல் 2021 இன் நட்சத்திரங்களான ஹர்ஷல் படேல், வெங்கடேஷ் ஐயர், ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி நிர்வாகத்திற்கும் தொடர் முக்கியமானது:
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 12 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளதால், இந்தத் தொடர் இந்த வீரர்களுக்கு மட்டுமல்ல அணி நிர்வாகத்துக்கும் முக்கியமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, பல துறைகளில் மாற்றம் மற்றும் முன்னேற்றம் தேவை ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ப்ளேயிங் லெவன் இப்படி இருக்கலாம்:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கே.), வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், அவேஷ் கான், முகமது சிராஜ்.

ALSO READ |  IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News