ரிஷப் பண்டை காண ஓடோடி வந்தாரா முன்னாள் காதலி... நடிகையின் போட்டோ வைரல்

Rishabh Pant - Urvashi Rautela : ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை காண பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா அங்கு வந்ததாக தகவல்கள் பரவுகின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 6, 2023, 08:51 AM IST
  • இருவரும் முன்பு காதலித்ததாக கூறப்பட்டது.
  • ஆனால், இருவரும் அதனை உறுதிப்படுத்தவில்லை.
  • ஊர்வசி ரவுத்தேலாவின் இன்ஸ்டா ஸ்டோரிதான் வைரலானது.
ரிஷப் பண்டை காண ஓடோடி வந்தாரா முன்னாள் காதலி... நடிகையின் போட்டோ வைரல் title=

Rishabh Pant - Urvashi Rautela : பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷப் பண்டும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் அதிகம் வந்தன. பின்னர், அவர்கள் கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. 

தொடர்ந்து, இணையத்தில், ரிஷப் - ஊர்வசியை முன்வைத்து சில சச்சரவுகள் அரங்கேறும்.  இது ஒருபுறம் இருக்க, ரிஷப் பண்ட் சமீபத்தில் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பும்போது ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். டேராடூனில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

அந்த வகையில், ரிஷப் பண்ட் உடன் கருத்து முரண்பாட்டில் இருப்பதாக கூறப்படும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, பண்டை மும்பை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்ததாக தற்போது வதந்திகள் பரவி வருகின்றன.

மேலும் படிக்க | Asia Cup 2023: ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்! போட்டி நடைபெறுமா?

ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மும்பை கோகிலாபென் மருத்துவமனையின் புகைப்படத்தை ஊர்வசி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக நேற்று (டிச. 5) வெளியிட்டார். பிறகுதான் இந்த வதந்திகள் இணையத்தில் வட்டமிட தொடங்கின. இருப்பினும், அவர் உண்மையில் ரிஷப் பண்டை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Rishabh

முன்னதாக, மேல் சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் மும்பை கோகிலாபென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும்,"அவர் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்படுவார். மேலும் அவர் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி, தோள்பட்டை சேவையின் இயக்குநர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவின் நேரடி மேற்பார்வையில் இருப்பார். 

ரிஷாப் அறுவைசிகிச்சை மற்றும் தசைநார் கிழிதல் ஆகியவற்றுக்கு அடுத்தடுத்த சிகிச்சை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார். மேலும் அவரது உடல்நலன் மீட்பு பிசிசிஐ மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | IPL 2023: ரிஷப் பந்திற்கு பதிலாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் வீரர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News