விராட் கோலி கேப்டன் டூ பாண்டியா மும்பை ரிட்டன்ஸ்: ஐபிஎல் 2023-ல் மறக்க முடியாத 5 நிகழ்வுகள்

Unmissable Moments from IPL 2023: 2023 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் நடந்த 5 மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம். ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது முக்கிய நிகழ்வாகும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 26, 2023, 03:04 PM IST
  • ஆர்சிபி கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி
  • ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பைக்கு திரும்பினார்
  • கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கம்
விராட் கோலி கேப்டன் டூ பாண்டியா மும்பை ரிட்டன்ஸ்: ஐபிஎல் 2023-ல் மறக்க முடியாத 5 நிகழ்வுகள் title=

ஐபிஎல் 2023 -ல் பல மறக்க முடியாத நிகழ்வுகள் உள்ளன. எம்எஸ் தோனி முழங்கால் வலியுடன் விளையாடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்தாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பு மீண்டும் ஒருமுறை விராட் கோலியிடம் வந்தது. கடந்த முறை குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா 2023 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். இப்படியான 5 சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். 

ஹர்திக் பாண்டியா மும்பை ரிட்டன்ஸ்

ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். அவருக்கு அந்த அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார். அவரை தங்களது அணிக்கே நூறு கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து மீண்டும் அழைத்து வந்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 

மேலும் படிக்க | விராட் கோலி: பாக்சிங் டே டெஸ்டில் மலைக்க வைக்கும் சாதனைகள்..!

ரோகித் சர்மா நீக்கம் 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டதால், ஐந்து முறை அந்த அணியை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்ற ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரோகித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் இது குறித்து பேசவில்லை என்றும், தகவலை மட்டுமே தெரவித்ததாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் மீதான நம்பிக்கையை இழந்து சோஷியல் மீடியாக்களில் அன்ஃபாலோ செய்தனர்.

விராட் கோலி மீண்டும் கேப்டன்

கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மீண்டும் விராட் கோலி வசம் வந்தது. டூபிளெசிஸ் காயமடைந்ததால் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைந்தது ஆர்சிபி நிர்வாகம். டூபிளசிஸ் இம்பாக்ட் பிளேயராக விளையாடினார். 

ஐபிஎல் இறுதிப் போட்டி

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மூன்றாவது நாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகுடம் சூடியது. 

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாக்பாட்

ஒருநாள் போட்டி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் அடித்தது. மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. டிராவிஸ் ஹெட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தான்.

மேலும் படிக்க | தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன்: கம்பீர் கணிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News