சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், நடப்பு ஐபிஎல் தொடரில் புயல்வேக பந்துவீச்சு மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். சோயிப் அக்தர் மற்றும் கம்ரான் அக்மல் உள்ளிட்ட முன்னாள் சர்வதேச வீரர்கள் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சால் ஈர்க்கப்பட்டுள்ளனர். கம்ரான் அக்மல் பேசும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த பிரெட்லீ மற்றும் சோயிப் அக்தர் உம்ரான் மாலிக் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த புகழாரங்களுக்கு ஏற்ப புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் உம்ரான் மாலிக். ஒரு ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இதற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா இந்த சாதனையை படைத்திருந்தார். இப்போது அவரின் சாதனையை தகர்த்து அந்த சாதனையை தன் பெயரில் பதிவு செய்துள்ளார் உம்ரான் மாலிக். பும்ரா 2017 ஆம் ஆண்டு 23 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். உம்ரான் மாலிக் 22 வயதில் செய்துள்ளார்.
மேலும் படிக்க | RCB அளித்த கவுரவத்தால் உருகும் கெயில், டிவில்லியர்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனை உம்ரான் மாலிக் வசம் வந்துள்ளது. இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய உம்ரான் மாலிக் 23 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாப் 5-க்கு முன்னேறியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உம்ரான் மாலிக் உள்ளார். முதல் இடத்தில் யுஸ்வேந்திர சாஹல் இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணி, வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது. 194 ரன்களை எடுத்த அந்த அணி, மும்பையின் அச்சுறுத்தலான பேட்டிங்கை தட்டுத் தடுமாறி கட்டுப்படுத்தி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
மேலும் படிக்க | இதுவரை ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் எத்தனை தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR