முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் இரு அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் - தவான் ஜோட நிதானமாக விளையாடினர். இதையடுத்து, தவான் 35 ரன்கள் எடுத்துதிருந்த போது ஆட்டமிழந்தார்.
தவான் விக்கெட்டை இழந்த பொது போது இந்திய அணி 9.5 ஓவர்களுக்கு 70 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
அடுத்ததாக களமிறங்கிய ரெய்னா ரெய்னா 47-ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20-ஓவர் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித்ஷர்மா 89 ரன்களும், ரெய்னா 47 ரன்களும் குவித்தனர்.
இதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 6-விக்கெட் இழப்புக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 72 ரன்கள் எடுத்தார்.
இதை தொடர்ந்து முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.