Tokyo Olympics: கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கொரோனா தொற்று பரவல் காரணமாகக் ஒத்தி போடப்பட்டன. இறுதியாக இம்மாதம் 23 தொடங்கும் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று, டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) மூன்று விளையாட்டு வீரர்களுக்கு COVID-19 தொற்று இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஒலிம்பிக்கில் போட்டிகள் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உட்பட 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக இருந்ததாக ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டோக்கியோவிற்கு வந்த பிறகு மேற்கொண்ட கொரோனா வைரஸ் தொற்று பரொசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரரான ரியு சியுங்-நிமிக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையிலும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | Tokyo Olympics போட்டிகளில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்
ஜப்பானில் பொது மக்களிடையேயும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு 1,000 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. பல ஜப்பானியர்கள் வெளிநாட்டு பார்வையாளர்களின் வருகை அதிகரித்து, அதன் மூலம் தொற்று பாதிப்பும் அதிகரிக்கும் என கூறி, விளையாட்டுகளை நடத்துவதை பல ஜப்பானியர்கள் எதிர்ப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 24ம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read | Tokyo Olympics போட்டிகளில் இருந்து விலகிய டென்னிஸ் நட்சத்திரங்கள்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR