Team India: கிரிக்கெட் அரசியலில் வீழ்ந்த 2 வீரர்கள்

இந்திய அணிக்குள் நிலவிய அரசியலால் சிறப்பாக விளையாடியும் இரண்டு பேருக்கு இந்திய அணியில் நீண்ட நாட்கள் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 1, 2022, 01:22 PM IST
  • இந்திய கிரிக்கெட் அணியில் அரசியல்
  • வாய்ப்பை இழந்த 2 முன்னணி வீரர்கள்
  • சிறப்பாக ஆடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை
Team India: கிரிக்கெட் அரசியலில் வீழ்ந்த 2 வீரர்கள்   title=

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். ஆனால், நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் கனவு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷடம் கிடைக்கிறது. அப்படி அதிர்ஷ்டம் கிடைக்காமல் கிரிக்கெட்டுக்குள் நிலவிய அரசியலால் இரண்டு வீரர்கள் சிறப்பாக விளையாடியபோதும் இந்திய அணிக்கு நீண்ட நாட்கள் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

1. அம்பதி ராயுடு

இந்தியாவின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு. இந்திய அணியில் 4வது இடத்தில் பேட் செய்ய வலுவான போட்டியாளராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணிக்காக இந்திய அணி தேர்வில் இவரது பெயர் இடம்பெறாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விரக்தியடைந்த அம்பத்தி ராயுடு உடனடியாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | விராட்கோலி இடத்தை காலி செய்யப்போகும் 19 வயது இளைஞர்

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் விஜய் சங்கர் பங்களிப்பார் என்பதால் அவரை தேர்ந்தெடுத்ததாக தேர்வாளர்கள் விளக்கமளித்தனர். இதற்கு அப்போது கமெண்ட் அடித்த அம்பத்தி ராயுடு, உலகக்கோப்பையைப் பார்க்க ஒரு ஜோடி 3டி கண்ணாடியை ஆர்டர் செய்துள்ளேன் என பிசிசிஐ தேர்வாளர்களை கிண்டலடித்தார். 

2. கருண் நாயர்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கருண் நாயருக்கும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்கு விளையாடிவர்களில் வீரேந்திர சேவாக்கிற்கு அடுத்தப்படியாக முச்சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய கருண் நாயர், சிறப்பாக விளையாடியபோதும் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என ரவி சாஸ்திரி மற்றும் விராட்கோலி விளக்கம் கொடுக்கவில்லை எனத் தெரிவத்தார். இது தொடர்பாக என்னிடம் யாரும் பேசவில்லை என்றும் கருண் நாயர் தெரிவித்தார். 

இந்த 2 வீரர்களும் இந்திய அணிக்குள் நிலவிய அரசியலால் பெரிய தொடர்களில் விளையாடும் வாய்ப்பையும், இந்திய அணிக்கு நீண்ட நாட்கள் விளையாடும் வாய்ப்பையும் இழந்தனர். 

மேலும் படிக்க | இந்திய அணிக்கு கேப்டன் - ரெக்கமண்ட் செய்யும் இங்கிலாந்து முன்னாள் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News