ஒருநாள்-டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1

ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

Last Updated : Feb 15, 2018, 08:39 PM IST
ஒருநாள்-டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 title=

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-1 என தொடரை கைப்பற்றியது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சரித்திரம் படைத்தது.

இந்த சாதனை மூலம், இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 121 புள்ளிகளில் இருந்து 118 புள்ளிகளுக்கு சரிந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

நாளை செஞ்சூரியனில் நடைபெறும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 6_வது போட்டியில், ஒருவேளை இந்தியா தோற்றாலும், முதலிடத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கு ஒரு புள்ளி கூடும், தோற்கும் அணிக்கு ஒரு புள்ளி குறையும்.

இந்த தொடருக்கு முன்னர், இந்திய அணி 119 புள்ளி பெற்று 2_வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடரை இழந்தாலும் ஐசிசி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

Trending News