இப்படி ஒரு ரெக்கார்டா? உலக சாதனை படைத்த இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்ச்சியாக 12 ஒருநாள் தொடரை வென்று உலக சாதனை படைத்துள்ளது இந்திய அணி.    

Written by - RK Spark | Last Updated : Jul 29, 2022, 11:46 AM IST
  • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
  • 3 -0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
  • அடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இப்படி ஒரு ரெக்கார்டா? உலக சாதனை படைத்த இந்திய அணி! title=

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 12வது தொடரை வென்று இந்திய அணி உலக சாதனை படைத்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது.  ஷுப்மான் கில் மற்றும் யுஸ்வேந்திர சாஹலின் உதவியால் வெஸ்ட் இண்டீஸை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 தோல்விகளை சந்தித்துள்ளது. 3வது ஒருநாள் போட்டியில் ஷுப்மான் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்தார், ஷிகர் தவான் 58 ரன்கள் எடுத்தார். 34 ஓவர்களில் 225/3 ரன்கள் அடித்து இருந்த நிலையில் இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இலக்கு 35 ஓவர்களில் 257 ஆக மாறியது.

 

மேலும் படிக்க | INDvsWI 1st T20: பலமான அணியை அறிவித்த மேற்கிந்திய தீவுகள்! என்ன செய்யப்போகிறது இந்திய அணி?

கடைசியாக 2006 ஆம் ஆண்டு பிரையன் லாரா தலைமையில் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தியது. அதன் பிறகு அவர்கள் இப்போது வரை இந்திய அணியை வீழ்த்தவில்லை.  தொடர்ச்சியாக 12 தொடர்களை இழந்துள்ளது மேற்கிந்திய தீவுகள்.  2006ல் 1 - 4 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது இந்திய அணி.  ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிரான அதிக வெற்றியை பதிவு செய்திருந்த பாகிஸ்தான் சாதனையை முறியடித்து உள்ளது.  ஜிம்பாப்வேக்கு எதிரான 11 ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் வென்று இருந்தது.  

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 138 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 69 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. ஆறு ஆட்டங்கள் டையில் அல்லது கைவிடப்பட்டு எந்த முடிவையும் தரவில்லை.  மேலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

மேலும் படிக்க | Virat Kohli: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News