ஆசிய கோப்பை 2022ல் இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வித்தியாசமான பிளேயிங் லெவன்களை களமிறக்கினார். இரண்டில் வெற்றியும், ஒன்றில் இந்திய அணி தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால், இந்த மூன்று போட்டிகளிலும், டீம் இந்தியாவின் ஒரு மூத்த வீரருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
புறக்கணிக்கப்படும் வீரர்
2022 ஆசிய கோப்பையில் இதுவரை விளையாடிய போட்டிகளில், ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இடம் கொடுக்கவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீசுவதுடன் பேட்டிங்கும் விளையாடுவார். பல 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் அவர், கேரம் பந்துவீச்சு மூலம் எதிரணியினரை திணறடிக்கவும் செய்வார்.
மீண்டும் அணியில்
2021 நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் டி20 அணிக்குத் திரும்பினார். 8 மாதங்களுக்குப் பிறகு அஷ்வின் இந்திய அணியில் இடம்பிடித்தார். அவரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.
அஸ்வின் ரெக்கார்டு
ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை இந்திய அணிக்காக 51 டி20 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், 112 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது புள்ளிவிவரங்கள் மிகவும் அற்புதமானவை. ரவிச்சந்திரன் அஸ்வின் 86 டெஸ்ட் போட்டிகளில் 442 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இனி வரும் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தால், அவரது அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் பயன்படும்.
மேலும் படிக்க | தோல்விக்கு காரணம் இதுதான்! இணையத்தில் குமுறும் ரசிகர்கள்!
மேலும் படிக்க | CSK IPL2023: சிஎஸ்கேவுக்கு கேப்டன் தோனி; நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னணி இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ