ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2023ல் நிறைய ஏற்ற இறக்கங்களை கண்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி மற்றும் ODI உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோல்வி என முக்கிய நிகழ்வுகளில் தோல்வியை சந்தித்தது. 2024 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கிறது. கேப்டவுனில் நடக்கும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து இந்த ஆண்டுக்கான போட்டிகள் தொடங்குகிறது. அதன்பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த டி20 போட்டிகள் டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சில ஆட்டங்களாக இருக்கும்.
pe Town#TeamIndia have arrived for the second #SAvIND Tpic.twitter.com/VGCTdk7yzO
— BCCI (@BCCI) January 1, 2024
மேலும், 2024ல் இந்தியா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முறையே 2024ல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இரண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. மொத்தம் நான்கு டெஸ்ட் தொடர்கள் இந்திய கிரிக்கெட் அட்டவணை மற்றும் WTC 2023-25 சுழற்சியின் பகுதியாக இருக்கும். பெரும்பாலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் மார்ச் முதல் மே வரை ஐபிஎல்லில் பிஸியாக இருப்பார்கள், அதன் பிறகு அவர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை விளையாடுவார்கள். ODI உலகக் கோப்பையை தவறவிட்ட பிறகு, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி கோப்பையை வெல்ல முயற்சி செய்து வருகிறது.
2024ல் இந்திய அணி விளையாடும் போட்டிகள்:
- 2வது டெஸ்ட் போட்டி vs தென்னாப்பிரிக்கா ஜனவரியில் (Away)
- 3 டி20கள் vs ஆப்கானிஸ்தான் ஜனவரியில் (Home).
- 5 டெஸ்ட் vs இங்கிலாந்து ஜனவரி-மார்ச் (Home).
- ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை (Away).
- ஜூலையில் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் (Away).
- 2 டெஸ்ட், 3 T20 vs வங்காளதேசம் செப்டம்பர் - அக்டோபர் (Home).
- 3 டெஸ்ட் vs நியூசிலாந்து அக்டோபர் - நவம்பர் (Home).
- 4 டெஸ்ட் vs ஆஸ்திரேலியா நவம்பர் - டிசம்பர் (Away).
ரவிச்சந்திர அஸ்வின் & ரிஷப் பந்த்
ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரராக இருந்து வருகிறார், மேலும் 2024 அவரது டெஸ்ட் வாழ்க்கையில் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைய அவருக்கு வாய்ப்பளிக்கும். 37 வயதான இவரின் டெஸ்டில் தற்போது 95 போட்டிகளில் 23.69 என்ற சராசரியில் 490 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த 12 மாதங்களில் 100 டெஸ்ட் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட் மைல்கற்களை எட்ட வாய்ப்புள்ளது. மேலும் ரிஷப் பந்த் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். கார் விபத்திற்கு பிறகு தற்போது சரியாகி வருகிறார். 2024ல் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | வேட்டையன் விராட் கோலி... 2023இல் படைத்த டாப் சாதனைகள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ