இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கைவிடப்பட்டது

இந்தியா - இலங்கை இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் தடைபட்டு ஆட்டம் கைவிடப்பட்டது.

Last Updated : Jan 6, 2020, 10:13 AM IST
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கைவிடப்பட்டது title=

இந்தியா - இலங்கை இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் தடைபட்டு ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அதனால், போட்டி துவங்குவதற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இடையே மழை விட்ட நிலையில் பிச்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதற்கு தொடர்ந்து தாமதம் ஆனது.

வாக்குவம் கிளீனர் வைத்தும் காய வைக்க முடியாமல், அயன் ஃபாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை மூலம் ஆடுகளத்தை காய வைக்க முயற்சி நடைபெற்றது. இதையடுத்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் , அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News