ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோத இருந்தன . மெல்போர்னில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது . இந்திய நேரப்படி ஒன்றரை மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி இது. மழையால் தாமதமானது. மழை நின்று, மைதானம் ஈரமாக இருந்ததால் போட்டி தொடங்க சரியான நேரத்திற்காக காத்திருந்தனர்.
Update from Melbourne
Toss continues to be delayed due to wet outfield. Umpires will carry another round of inspection at 8:15 pm local time (around 30 mins later).#T20WorldCup | #AUSvENG pic.twitter.com/IvfqZxPgcB
— T20 World Cup (@T20WorldCup) October 28, 2022
ஆனால் மீண்டும் மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் இந்த போட்டி கைவிடப்பட்டது.இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று மெல்போர்னில் நடக்கவிருந்த ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Here's how the #T20WorldCup Group 1 standings look after a full day that was rained off in Melbourne
Who do you think are now the favourites for the top 2 spots?
Check out https://t.co/uDK9JdWuKo pic.twitter.com/oM4O5yVTfl
— T20 World Cup (@T20WorldCup) October 28, 2022
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழையால் சில போட்டிகள் ரத்தாவது, அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தென்னப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டி, அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்தானது.
மேலும் படிக்க | T20 World Cup: பாகிஸ்தான் பரிதாபம்; ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ