T20 world Cup: இந்தியாவை வெளியேற்றி பாகிஸ்தான் அரையிறுதி செல்ல வாய்ப்பு!

T20 world Cup: பங்களாதேஷுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு இந்தியா குழு 1-ல் முதல் இடத்தைப் பிடித்தது, ஆனாலும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.    

Written by - RK Spark | Last Updated : Nov 5, 2022, 10:24 AM IST
  • இந்திய அணி 4 வெற்றிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்பே அணியுடன் விளையாடுகிறது.
  • இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
T20 world Cup: இந்தியாவை வெளியேற்றி பாகிஸ்தான் அரையிறுதி செல்ல வாய்ப்பு! title=

புதன்கிழமை பங்களாதேஷுக்கு எதிரான த்ரில் வெற்றியின் மூலம், சூப்பர் 12 இன் குரூப் 2லிருந்து 2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை நிலைநிறுத்திக் கொண்டது. இருப்பினும், எந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை முழுமையாக பெறவில்லை.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருந்தாலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்தியா தற்போது நான்கு போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா 5 புள்ளியும், மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் வங்கதேசம் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.  

மேலும் படிக்க | பிசிசிஐ என்னை தூக்கி எறிந்தாலும் நான் இதை செய்தேன் - முகமது ஷமி ஓபன் டாக்

பங்களாதேஷ் இப்போதைக்கு நான்காவது இடத்தில் உள்ளது.  ஆனால் அது தற்காலிகமானதாக இருக்கலாம். இந்தியாவைப் போலவே, அவர்கள் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளனர். மேலும், பங்களாதேஷ் விளையாடுவதற்கு பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது மற்றும் அவர்களின் நிகர ரன் விகிதம் -1.276 மிகக் குறைவாக இருப்பதால், முதல் இரண்டு இடங்களுக்குள் இந்தியாவை சவால் செய்ய அவர்கள் அந்த போட்டியில் ஒரு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கா, நிகர ரன் ரேட் +1.441.  ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது. 

வியாழன் அன்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தால், சூப்பர் 12 கட்டத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும், ஆனால் தோல்வியை தழுவியது.  இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால், அது மற்ற 3 அணிகளுக்கும் சாதகமாக இருக்கும்.  பாகிஸ்தானின் நிகர ரன் விகிதம் +1.117 இந்தியாவின் +0.730 ஐ விட சற்று அதிகமாக உள்ளது.  குரூப் 2ல் நடக்க இருக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மேலும் படிக்க | 'இந்தியாவை வீழ்த்தினால் என்னையே தருகிறேன்' பாகிஸ்தான் நடிகையின் பகீர் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News