T20 WC: ’கலிவர்’ அவதாரம் எடுத்துள்ள மேக்ஸ்வெல்..!

20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான புரோமோவில் கலிவர் அவதாரத்தில் மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 27, 2022, 08:37 AM IST
  • ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை
  • அடுத்தடுத்து வெளியாகும் புரோமோ வீடியோக்கள்
  • கலிவர் அவதாரத்தில் மேக்ஸ்வெல் இருக்கும் வீடியோ வைரல்
T20 WC: ’கலிவர்’ அவதாரம் எடுத்துள்ள மேக்ஸ்வெல்..!  title=

20 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 16ம் தேதி தொடங்கி, நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 29 நாட்கள் நடைபெறும் உலக்கோப்பை தொடரில் 45 போட்டிகள் நடைபெறுகின்றன. டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள. 

மேலும் படிக்க | Ind vs SL: ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி

நமிபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு வரவேண்டும். சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23 ஆம் தேதியன்று எதிர்கொள்ள உள்ளது. 

உலககோப்பை தொடர் தொடங்குவதற்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்கான விளம்பரங்களை ஆஸ்திரேலியா வெளியிட்டு வருகிறது. லேட்டஸ்டாக வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரத்தில் மேக்ஸ்வெல்லை ’கலிவர்’ அவதாரத்தில் காட்டியுள்ளனர். மிகப்பெரிய உருவத்தில் நகரில் வலம் வரும் மேக்ஸ்வெல்லை, அங்கிருக்கும் மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர். ஆங்கிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற நாவல் மற்றும் திரைப்படமான ‘கலிவர் டிராவல்ஸ்’ திரைப்படத்தில் வரும் கலிவரின் அவதாரத்தை பினணியாக கொண்டு இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | IPL2022: சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறப்போகும் மற்றொரு வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News