மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது; எனினும் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

ICC மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குழு போட்டியில் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

Last Updated : Mar 3, 2020, 06:08 PM IST
மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது; எனினும் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா! title=

ICC மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குழு போட்டியில் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதுதொடர்பான அறிவிப்பில் "போட்டி கைவிடப்பட்டது. குழு B-ல் முதல் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியது" என @T20WorldCup தனது ட்விட்டர் கைப்பிடிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை முறியடித்து B குழுவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மற்றும் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் எனவும் @T20WorldCup குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம், தங்களது நான்கு குழு நிலை போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய இந்தியா, குழு A-ல் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில் அதே நாளில் நடைபெற இருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது.

இவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள், ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் பலபறிட்சை நடத்துகின்றனர்.

ICC மகளிர் T20 உலக கோப்பை

குழு A
அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள் நிகர ரன் வீதம்
IND-W 4 4 0 8 0.979
AUS-W 4 3 1 6 0.971
NZ-W 4 2 2 4 0.364
SL-W 4 1 3 2 -0.404
BD-W 4 0 4 0 -1.908
குழு B
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் நிகர ரன் வீதம்
SA-W 4 3 0 7 2.226
ENG-W 4 3 1 6 2.291
WI-W 4 1 2 3 -0.654
PAK-W 4 1 2 3 -0.761
THI-W 4 0 3 1 -3.992

இதற்கு முன்பு நடைப்பெற்ற நான்கு டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒருபோதும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதில்லை, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி 2009-ல் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலியாவுடனான முக்கோண தொடரில் இந்தியாவும் இங்கிலாந்தும் தங்களது மிக சமீபத்திய இரண்டு சர்வதேச டி20 போட்டிகளை விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News