ஆஸ்திரேலியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியுடனான உணர்வுபூர்வமான தருணங்களை நினைவு கூர்ந்தார்
டிரஸ்ஸிங் ரூமை சர்வதேச வீரர்களுடன் பகிர்ந்து கொள்வது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த நடராஜன், அது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது, ஆனால் அவர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது என்று தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடுவதை மிகவும் ரசித்தேன், அவர்கள் இருவரும் என்னை ஆதரித்து ஊக்குவித்தனர் என்று தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட நடராஜன், சர்வதேச போட்டிகளில் ஏதேனும் ஒரு வடிவத்தில் அறிமுகமாவேனா என்று தெரியாத நிலையில், மூன்று வடிவத்திலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்தார்.
Also Read | cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள்
“விராட் கோஹ்லி (Virat Kohli) மற்றும் அஜிங்க்யா ரஹானே என்னை நன்றாக கையாண்டனர். அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னை பல விதங்களிலும் ஊக்குவித்தார்கள். அவர்கள் இருவரின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் ரசித்தேன், ”என்று 29 வயது நடராஜன், தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வந்த பிறகு ஜனவரி 24ஆம் தேதியன்று அளித்த பேட்டியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட்ட நடராஜன் (T.Natarajan) கூறினார். ஒரே சுற்றுப்பயணத்தின் போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். “நான் என் வேலையைச் செய்ய ஆர்வமாக இருந்தேன். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை”என்று நடராஜன் தெரிவித்தார்.
Also Read | T.Natarajan: சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு பயணம்
"நான் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு அழுத்தம் இருந்தது. நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பினேன். ஒரு விக்கெட் எடுப்பது என்பது என்னுடைய கனவாக இருந்தது”
டி 20 தொடரை இந்திய வென்ற பிறகு, கேப்டன் கோஹ்லி கோப்பையை தன்னிடம் கொடுத்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக நடராஜன் கூறினார். "டி 20 தொடர் வெற்றியின் பின்னர் கோஹ்லி கோப்பையை என்னிடம் ஒப்படைத்தபோது, என் கண்களில் கண்ணீர் வந்தது," என்று அவர் கூறினார்.
டெஸ்ட் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வரலாற்று வெற்றியில் நடராஜன் மிகப் பெரிய பங்காற்றினார்.
Also Read | இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கும் BCCI
"இந்தியாவுக்காக விளையாடும் என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. அது ஒரு கனவு போல இருந்தது. பயிற்சியாளர்கள், வீரர்களிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. அவர்கள் என்னை பெரிதும் ஆதரித்தார்கள், ஊக்கப்படுத்தினார்கள். அவர்களின் ஆதரவின் காரணமாக என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது,”என்று அவர் தெரிவித்தார்.
"ஐபிஎல்லில் விளையாடியது மிகவும் சிறந்த பயிற்சியாக இருந்தது. பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் ஐ.பி.எல்லில் விளையாடியது அந்த அனுபவம் பயனுள்ளதாக இருந்ததால் உதவியது. நான் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். முதலில், அது கடினமாக இருந்தது, ஆனால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை நான் பயன்படுத்திக் கொண்டேன்”என்று நடராஜன் மேலும் கூறினார்.
ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் (David Warner) வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் (Sunrisers Hyderabad) அவரது கேப்டன், அவரைப் பற்றிச் சொல்ல நல்ல விஷயங்கள் இருப்பதாகவும் நடராஜன் கூறினார்.
Also Read | ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாடு திரும்பிய Team India-வுக்கு அமோக வரவேற்பு
"வார்னர் என்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார். எனது முன்னேற்றத்தைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அவர் போட்டியின் போது என்னிடம் கூறினார், என் மகள் பிறந்த நேரம் நல்ல நேரம்” என்று தமிழக வேகப்பந்து வீச்சாளர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது தமிழக வீரர் நடராஜனுக்கு மகள் பிறந்தாள். உடனே மகளை பார்க்க முடியவில்லை என்றாலும், நாட்டிற்காக விளையாடுவது குடும்பத்திற்கு பெருமை அளிக்கிறது என்று கூறுகிறார் நடராஜன்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR