பாண்டியா இல்லாத நேரம் பார்த்து மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார்! ரோகித் ரியாக்ஷன்

Suryakumar Yadav joins Mumbai Indians for IPL 2024 : பாண்டியா இல்லாத நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐக்கியமாகியுள்ளார் சூர்யகுமார் யாதவ். டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2024, 09:00 AM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார்
  • ரோகித் சர்மாவுடன் இணைந்து தீவிர பயிற்சி
  • ஹர்திக் பாண்டியா இல்லாத நேரம் ஆலோசனை
பாண்டியா இல்லாத நேரம் பார்த்து மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார்! ரோகித் ரியாக்ஷன் title=

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டலஸ் அணிக்கு எதிராக நான்காவது போட்டியில் விளையாட இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மும்பை அணி. குட்நியூஸாக காயத்தில் இருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாண்டியா இல்லாத நேரத்தில் சூர்யகுமார் மும்பை அணியுடன் ஐக்கியமாகியுள்ளார்.

சூர்யகுமார் அதிருப்தி

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது சூர்யகுமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பிடிக்கவில்லை. எந்த காரணமும் இன்றி அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு பும்ரா, சூர்யகுமார் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி குஜராத் அணிக்கு சென்ற பாண்டியாவை, திரைமறைவு பேரத்தில் பெரிய தொகை கொடுத்து அவரை மீண்டும் மும்பை அணிக்கே அழைத்து வந்தது அம்பானி குடும்பம். இதுசம்பந்தமாக ரோகித்திடம் எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தோனி வந்தும் எந்த பயனும் இல்லை... சிஎஸ்கே பேட்டர்கள் தடுமாறியதற்கு என்ன காரணம்?

அணிக்குள் பிளவு

இது குறித்து முழுமையாக அறிந்த சூர்யகுமார், ஜஸ்பிரித் பும்ரா ஏன் ரோகித் சர்மாவை நீக்கினீர்கள் என்று அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் தங்களை கேப்டன் பொறுப்பு பரிசிலீக்காமல், அணியைவிட்டு வெளியேறிய ஒருவரை அழைத்து வந்தது என்ன வகையில் நியாயம் என்றும் கேட்டதற்கு, எங்கள் விருப்பப்படி தான் விளையாட வேண்டும் என மும்பை அணி நிர்வாகம் அவர்களிடம் தெரிவித்துவிட்டதாம்.

மும்பை அணிக்கு குட்பாய்

இதனால் அதிருப்தியில் இருக்கும் மூவரும் மும்பை அணியில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக வெளியேற இருக்கிறார்கள். இதனை மும்பை அணி நிர்வாகத்திடமும் திட்டவட்டமாக தெரிவித்த ரோகித், சூர்யகுமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இந்த ஐபிஎல் தொடர் எப்போது முடியும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அணிக்குள்ளும் ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தியில் இருப்பதால் அவர்கள் அவரிடம் முகம் கொடுத்துகூட பேசுவதில்லையாம். இந்த சூழலில் தான் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா இல்லாத நேரம் பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேர்ந்துள்ளார். ரோகித்துடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை மும்பை அணி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | குஜராத்துக்கு ஷாக் கொடுத்த ஷஷாங்க் சிங்... ஏலத்தில் பஞ்சாப் எடுத்த தவறான வீரர் - ஞாபகம் இருக்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News